search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானப்படை அதிகாரி"

    பாகிஸ்தானிடம் கைதியாக பிடிபட்டுள்ள சென்னையை சேர்ந்த விமானப்படை அதிகாரியான அபினந்தனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #MKStalin #Abhinandan #BringBackAbhinandan
    சென்னை:

    பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று நுழைந்த இரு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வீழ்த்தப்பட்ட இரு விமானங்களில் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் கோஹி ரட்டா பகுதியில் விழுந்து தீப்பற்றி எரியும் காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

    இந்திய விமானப்படையின் வீரர் அபினந்தனை கைது செய்துள்ளோம். அவருடைய சர்வீஸ் எண் 27981. அவர் இப்போது எங்கள் ராணுவத்திடம் உள்ளார் என பாகிஸ்தான் தெரிவித்தது.



    இதற்கிடையே, பாகிஸ்தானில் சிக்கிய விமானி அபினந்தன் வர்த்தமான், சென்னை தாம்பரம் அருகே மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் எனவும், இவரது தந்தை விமானப்படை முன்னாள் அதிகாரி என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

    இந்நிலையில், பாகிஸ்தானிடம் கைதியாக பிடிபட்டுள்ள சென்னையை சேர்ந்த விமானப்படை அதிகாரியான அபினந்தனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அபினந்தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சுற்றி  எனது நினைவுகள் தற்போது உள்ளது என தெரிவித்துள்ளார். #MKStalin #Abhinandan #BringBackAbhinandan
    விமானப்படை அதிகாரி ஒருவர் தனது துப்பாக்கியை துடைத்துக் கொண்டிருந்த போது தவறுதலாக வெடித்த குண்டு அவரது தொடையில் பாய்ந்தது. #IAF #Bullet
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படையில் துணை மார்ஷலாக பணிபுரிந்த் வரும் அதிகாரி எஸ்.பி.தியோ. இவர் நேற்று தனது சர்வீஸ் துப்பாக்கியை துடைத்துக் கொண்டிருந்தார்.

    அப்போது தவறுதலாக துப்பாக்கியின் விசையில் கை பட்டதால் தோட்டா குண்டு வெடித்தது. அந்த குண்டு அவரது தொடையில் பாய்ந்ததல் அவர் அலறி துடித்தார்.



    இதில் படுகாயம் அடைந்த தியோ, டெல்லியில் அமைந்துள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது நிலைமை சீராக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். #IAF #Bullet
    ×